1100 மாணவ-மாணவிகள் பங்கேற்பு உடுமலையில் ரத்த தான முகாம்

உடுமலை,செப்.6: உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் இலவச ரத்த தான முகாம் மற்றும் விழிப்புணர்வு, பரிசோதனை முகாம் நேற்று முன்தினம் நடந்தது.கோவை கங்கா மருத்துவமனை, கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், பொள்ளாச்சி ஏ.நாகூர் பிரேஷிதா மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி, புனித செபஸ்தியார் ஆலயம், ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி, உடுமலை நேசக்கரங்கள் ஆகியவை சார்பில் இந்த முகாம் நடந்தது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் மார்பக புற்றுநோயை கண்டறிந்து முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளித்தல், சர்க்கரை நோயால் வரும் பாத பிரச்னைகளை கண்டுபிடித்து கால் துண்டித்தலை தடுத்தல், அறுவை சிகிச்சை செய்தல், நீரிழிவுக்கு இலவச சிகிச்சை அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

Related Stories: