×

கொங்குநகரில் சாக்கடை அடைப்பை சீர் செய்ய நடவடிக்கை

திருப்பூர்,செப்.6: திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சி மேயராக தினேஷ்குமார் பொறுப்பேற்ற பிறகு அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு கண்டு வருகிறார். ஒரு குரல் புரட்சி திட்டத்தின் மூலம் வருகிற புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி கொங்குநகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல முடியாத நிலை இருந்து வருவதாக  மேயருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற மேயர் தினேஷ்குமார் சாக்கடை கால்வாய் அடைப்பு உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து சாக்கடை கால்வாய் அடைப்பை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒரு மணி நேரத்தில் பணியாளர்கள் மூலம் சாக்கடை அடைப்பினை சீரமைத்தனர். புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், மாநகராட்சி மேயரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Tags : Kongunagar ,
× RELATED கொங்குநகர், சின்னேரிபாளையத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்