×

4 ஊராட்சி மக்கள் மகிழ்ச்சி நடப்பாண்டில் விதிமீறிய 28 ஆலைகளுக்கு சீல் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தகவல்

ஈரோடு, செப். 6: விதிமீறல் தொடர்பாக நடப்பாண்டில் 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் மோகன் கூறியதாவது: மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் 5ம் தேதி குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. ஈரோடு அலுவலகத்தில் இதுவரை 9 மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கூட்டத்தில் யாரும் கலந்து கொள்வது கிடையாது. ஈரோட்டில் 350 சாய, சலவை ஆலைகளும், 20 தோல் தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. ஆலைக்கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது தொடர்பாக புகார்கள் வருகின்றன. கடந்த சில நாட்களாக மழைநீரோடு கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக வந்த புகார்கள் தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தாண்டில் இதுவரை மின் இணைப்பு துண்டிப்பு, ஆலை மூடும் நடவடிக்கைகளில் 28 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மானிய நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கும். இவ்வாறு கூறினார்.

Tags : pollution ,board ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...