×

151வது பிறந்தநாள் விழா வஉசி சிலைக்கு அனைத்துக் கட்சியினர் மாலை.

நெல்லை, செப்.6: சுதந்திர போராட்ட வீரர் வஉசியின் 151வது பிறந்தநாளையொட்டி நெல்லையில் சிலைக்கு அனைத்துக் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பாளையங்கோட்டையில் உள்ள வஉசி சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், முன்னாள் எம்எல்ஏ லெட்சுமணன், தச்சை பகுதி செயலாளரும் முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை சுப்பிரமணியன், நெல்லை பகுதி செயலாளர் நமசிவாயம் என்ற கோபி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாநகர துணைசெயலாளர் அப்துல்ஹையூப், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாத்துரை, மாவட்ட பிரதிநிதிகள் இசக்கிபாண்டியன், வேங்கை வெங்கடேஷ் மற்றும் ரேவதி அசோக், ஷேக்தாவூது, இளைஞரணி மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Tags : Vausi Statue ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ