பண்டாரவூத்து மலைக்கிராமத்திற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு, செப். 6: வருசநாடு அருகே பண்டாரவூத்து மலைக்கிராமத்திற்கு தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பண்டாரவூத்து மலைகிராமம் உள்ளது, இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 60 ஆண்டு காலமாக இந்த கிராமத்திற்கு தார் சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் கிராம பொதுமக்கள், பால்கறவை காரர்கள், பள்ளி மாணவ மாணவிகள் முதியவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுதும் ஆட்டோக்களில் செல்லும் பொழுதும் வண்டி வாகனங்களை சேதமடைந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பதம் பார்த்து வருகிறது.இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சாலை வசதி இன்று வரையும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கையை வெரும் கோரிக்கையாக மட்டும் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகு றித்து கிராமவாசி பாண்டி கூறுகையில். ‘‘ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்வதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கராஜபுரம் கிராமத்தில் வாங்கிச் செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது, மேலும் ஆட்டோக்களில் செல்ல வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் கொடுத்து பாதி தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது எனவே தேனி மாவட்ட ஆட்சியர் விரைவில் தார் சாலை அமைத்திட வேண்டும்’’ என்றார்.

Related Stories: