×

போடி பகுதியில் பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி, செப். 6: போடி பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.போடி மேற்கு மலை தொடர்ச்சியிலும் தமிழக எல்லை பகுதி களிலும் தொடர்ந்து மழை பெய்து வரு வதால் மலைகளில் திரண்டு வரும் அருவிகள் ஒன்று சேர்ந்து கொட்டகுடி சாம்பலற்று அணையில் நிரம்பி வருகிறது. மேலும் அணையிலிருந்து மறுகால் பாய்ந்து வருவதால் கொட்டக்குடி ஆற்றில் மழை நீர் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் அவ்வப்போது தொடர்ந்து பெய்து வருவதால் போடியில் உள்ள 33 வார்டுகளுக்கு குடிநீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த மழைநீரும் மறுகால் பாய்ந்து வெளியேறும் போது கொட்டகுடி ஆற்றில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடி மூக்கரை பிள்ளையார் பெரும் மெகா அணையை தாண்டி கடந்து வருகிறது. மேலும் இந்த கனமழை காரணமாக ஆங்காங்கே பங்காரு சாமி கண்மாய், சிறுகுளம் ,ஒட்டுகுளம், சங்கரப்ப நாயக்கன் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. காட்டாறு வெள்ளம் ஏரி, குளங்களில் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Kottagudi ,Bodi ,
× RELATED போடி அருகே தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு..!!