உலக தென்னை நாள் விழா

சிங்கம்புணரி, செப்.6:  சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சேர்வைக்காரன்பட்டியில் உலக தென்னை நாள் விழா நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தனபாலன் தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் பேராசிரியர் செந்தூர்குமரன், வேளாண் உதவி இயக்குனர் அம்சவேணி முன்னிலை வகித்தனர். இதில் தென்னை சாகுபடியில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம், வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்துவதற்கான பூச்சி மேலாண்மை செயல் விளக்கம் மற்றும் கண்காட்சி வைக்கப்பட்டது. இதில் வேளாண் உதவி அலுவலர் ரத்னா காந்தி, தென்னை விவசாயிகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: