×

ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த ேவண்டும்: தொண்டி மக்கள் கோரிக்கை

தொண்டி, செப்.6: தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சமூக ஆர்வலர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டியை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளது. இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தொண்டி கடல் சார்ந்த பகுதி என்பதால் மீன்பிடி தொழிலும் பிரபலமாக உள்ளது. தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களே அதிகம் உள்ளனர். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த திமுக ஆட்சியில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியிருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் தடை ஏற்பட்டுள்ளது.தினமும் வெளிநோயாளிகள் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். எனவே ஆர ம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர் கலந்தர் ஆசிக் அகமது கூறுகையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பல அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி 2015 மற்றும் 2018ம் ஆண்டு தரம் உயர்த்தக் கோரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நேற்று முகாமில் மனு கொடுத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் என்றார்.

Tags : Dondi ,
× RELATED பேச்சு போட்டியில் தொண்டி மாணவி முதலிடம்