வத்தலக்குண்டுவில் எல்ஐசி ஏஜென்டுகள் ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு, செப். 6:  வத்தலக்குண்டு எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று எல்ஐசி ஏஜென்டுகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகிக்க, செயலாளர் பரமசிவம், பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும், வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இதில் சங்க துணை தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாகிகள் ராஜகோபால், வைரம், சம்பத், தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: