திருப்பூர் திருப்பூர் அரசு பள்ளிகளில் ரூ.80.40 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் எம்.எல்.ஏ. செல்வராஜ் தொடங்கி வைத்தார்

திருப்பூர், செப்.3: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரிச்சி பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சத்தில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டிட பணிகள் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.25.40 லட்சத்தில் இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்குதல் மற்றும் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணி, தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.நாகராசன், பகுதி கழக செயலாளர்கள் மு.க.உசேன், மியாமி அய்யப்பன், மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்,கருவம்பாளையம் பகுதி அவைத் தலைவர் தம்பி குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், வார்டு செயலாளர் ஆதவன் முருகேஷ், மீனவரணி அமைப்பாளர் கருணாகரன், இளைஞரணி சிராஜ்தீன், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவு:திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி, நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தில் பல நாட்களாக அகற்றப்படாத குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கி இருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த வழியாக காரில் வந்த, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகளை கண்டதும், காரில் இருந்து இறங்கினார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த இடத்திற்கு வரவழைத்து உடனடியாக குப்பைக் கழிவுகளை அகற்ற அறிவுறுத்தினார். பின்னர் சிறிது தூரம் வரை நடந்து சென்று நொய்யல் ஆற்றை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Related Stories: