அமைச்சர் வழங்கினார் விபத்தில் காயமடைந்த அம்மாபேட்டை பேரூராட்சி தலைவரை சந்தித்து அமைச்சர் ஆறுதல்

பவானி, செப்.3: அம்மாபேட்டை பேரூராட்சித் திமுக தலைவர் பாரதி (எ) வெங்கடாசலம். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தலைவாசல் அருகே ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். இதனால், சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த அறிந்த அமைச்சர் முத்துசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று பேரூராட்சித் தலைவர் வெங்காடசலத்திடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மாவட்டத் துணைச் செயலாளர் அறிவானந்தம், அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Related Stories: