புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீர் வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழியும் ஜம்பேரி

துறையூர், செப். 3: துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது இந்நிலையில் கொல்லி மலையில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக ஜம்பேரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்தது . ஜம்பேரி முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழிந்தது. திருச்சி மாவட்டத்தில் பெரிய ஏரியான ஜம்பேரி சுமார் 400 ஏக்கர் ஏக்கர் பரப்பளவு கொண்டது .இந்த ஏரி நிரம்பி உபரி நீர் மாராடி, உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது .இந்த ஏரியின் உபரி நீரால் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியைச் சுற்றியுள்ள வைரிச் செட்டிபாளையம், கோட்டப்பாளையம் வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் சீரக சம்பா நெல் நடவு செய்துள்ளனர் .ஆவணி மாதத்தில் ஜம்பேரி நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: