கல்வி கடன் வழங்க கோரி எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, செப்,3: மன்னார்குடியில் முகவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்க கோரி எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்தி மருத்துவ காப்பீட்டை அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண்டும். முகவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் வழங்குவதோடு வீட்டு வசதிகடன் 5 சதவீத வட்டியில் வழங்க வேண்டும். முகவர் நலநிதி அமைத்து, தொழில் முறை முகவராக அங்கீகரித்து பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பாலிசிக்கான போனஸ் உயர்த்தி பாலிசி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதி அளித்து பாலிசி மற்றும் சேவை மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும். வெளிநாட்டு பாலிசிதாரர்களுக்கு ஏதுவாக சேவை வழங்க வேண்டும். 5 வருடம் சிஎல்ஐஏ முடித்தவர்களுக்கு மன்ற விதிகளில் இருந்து விலக்கு அளித்து, சிஎல்ஐஏ மூலம் வரும் அனைத்து விதமான வருமானத்தையும் முன்பணம் பெறுவதற்கு கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் கிளை தலைவர் மகாலிங்கம் தலைமையில் மன்னார்குடி கோட்ட எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் பாண்டியன், பொருளாளர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணைத்தலைவர் செளந்திரம் பேசினார். ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: