×

திருவாரூரில் லாரி மீது மினி பேருந்து மோதி 9 பேர் காயம்

திருவாரூர்,செப்.3: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கூடூர் வழியாக ஆந்தகுடி வரை செல்லும் மினி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தை கீழ்வேளூர் தாலுகா கோகூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் ஓட்டி சென்றார். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகே பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றினை முந்துவதற்காக மினி பேருந்து முற்பட்டபோது அதன் மீது மோதியது. மேலும் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வேன், ஒரு கார் ஆகியவற்றின் மீதும் மினி பேருந்து மோதியது மட்டுமின்றி சாலையில் நடந்து சென்ற திருவாரூர் கேடிஆர் நகரை சேர்ந்த மணிகண்டன் (38) மற்றும் மயிலாடுதுறை சேர்ந்த முகமது ரபிக் (18) ஆகிய இருவர் காயமடைந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த புலிவலத்தைச் சேர்ந்த விஜயா(42), உள்பட 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruvarur ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...