பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, செப்.3: மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து பட்டுக்கோட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைமை தபால் நிலையம் அருகில் டார்ச் லைட் அடித்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ நகர செயலாளர் விஜயன், முன்னாள் நகர செயலாளர் ரோஜாராஜசேகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளிதாஸ், தனசீலி உள்பட பலர் கலந்து கொண்டனர். சிபிஐ ஒன்றிய செயலாளர் பூபேஷ்குப்தா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Related Stories: