×

வேள்விமங்கலம் கிராமத்தில் வெள்ள தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி

குன்னம், செப்.3: குன்னம் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் பஞ்சாயத்திற்குட்பட்ட வேள்விமங்கலம் கிராமத்தில் வெள்ளதடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மழை வெள்ள தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேள்வி மங்கலம் கிராமத்தில் வெள்ள தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் வேப்பூர் தீயணைப்புத் துறையினர் ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும். மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தால் அதனை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் போன்ற ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர், தலைமையில் நடைபெற்றது. மேலும் குன்னம் வட்டாட்சியர் அனிதா, வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.



Tags : Velvimangalam village ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது