×

கடல் நீர் புகாதவாறு கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும்

கொள்ளிடம், செப். 3: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய தண்ணீரால் சூழப்பட்டுள்ள திட்டு கிராமங்களை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்தாண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. 64 டிஎம்சி தண்ணீரை தேக்கி பயன்படுத்தும் அளவுக்கு ராசிமணலில் அணை கட்டினால் விவசாயத்திற்கு பயன்படும். கரூர் முதல் பஞ்சப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில் எத்தனை ஏரிகள் கொள்ளிடம் கரைப்பகுதியில் இருக்கின்றதோ, அத்தனை ஏரிகளிலும் தண்ணீரை நிரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக 50 ஆயிரம், உற்பத்தி செலவை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளமணல் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உள்ளே புகாதவாறு கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார. மாவட்ட விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் விஸ்வநாதன், ஆச்சாள்புரம் விவசாய சங்கத் தலைவர் அருண், நிர்வாகிகள் சீனிவாசன் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags : Kollid River ,
× RELATED திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய...