தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் பூங்காவை சீரமைக்க கோரிக்கை

கரூர், செப்.3: தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. இந்த பகுதியில வசித்து வரும் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், பூங்கா வளாகத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து தற்போது பயன்படுத்திட முடியாத நிலை உள்ளது. இந்த பகுதி சிறுவர், சிறுமிகளின் நலன் கருதி இந்த பூங்கா வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும் இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு பூங்கா வளாகத்தை விரைந்து சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: