தொழில் கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம்

மதுரை, செப். 3: மதுரை அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் மற்றும் டேக்கோ, ஐந்தணை சங்கத்துடன் இணைந்து சிக்கந்தர் சாவடியில் உள்ள ஆக்ரோ உணவு வளாகத்தில் சிறப்பு கூட்டம் நடத்தினர். ஒருகிணைந்த அப்பளம் கவுன்சில் சேர்மன் திருமுருகன் வரவேற்றார். ஆக்ரோ சேம்பர் தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார்.விவசாய சங்க ஒருகிணைப்பாளரும், மாநில தலைவருமான பாண்டியன் முன்னிலை வகித்தார். விவசாயிகளிடமிருந்து உளுந்து கொள்முதல் பற்றி முதல் கட்ட பேச்சுவார்தை நடத்தப்பட்டது. உளுந்தம் பயர் தரம் மற்றும் விலை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: