ஸ்ரீபெரும்புதூரில் எஸ்ஐயை தாக்கிய போதை ஆசாமிகள்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதூரில் சப் - இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கோதண்டன் (53). இவர், நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, நள்ளிரவு சந்தேகப்படும்படி பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து கோதண்டன் விசாரித்தார்.

அப்போது, அந்த நபர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். பின்னர், சப் - இன்ஸ்பெக்டர் கோதண்டனுக்கும், வாலிபர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கோதண்டன் வாலிபர்களை கையால் தாக்க முயன்றுள்ளார். போதையில் இருந்த இளைஞர்கள் சப் - இன்ஸ்பெக்டர் கோதண்டத்தை கையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சப் - இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: