×

தெற்கு அவிநாசிபாளையம் மின் நிலையத்தில் பழுதுபார்ப்பு பணி

பல்லடம், செப்.2: பல்லடம் அருகே தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் முதல் முறையாக மின் தடையின்றி,  பழுதுபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.பல்லடத்தில் இருந்து தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்திற்கு வரும் 110 கே.வி. மின்பாதையில் மின் தடை செய்யாமல் துணை மின் நிலையத்தில் திறப்பானில் ஏற்பட்ட பழுதை பாதுகாப்பு கவச உடை அணிந்த பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் ஒன்றரை மணி நேரம் தீவிரமாக மேற்கொண்டு பழுதை சரி செய்தனர். இதனையொட்டி தெற்கு அவிநாசிபாளையம், கொடுவாய், கொசவம்பாளையம், வடக்கு அவிநாசிபாளையம் (ஒரு பகுதி), தொட்டிபாளையம், கண்டியன்கோவில் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படவில்லை. அப்பகுதிகளுக்கு சீரான மின் விநியோகம் தடையின்றி வழங்கப்பட்டது. இப்பணியை கோவை ஹாட் லைன் செயற்பொறியாளர் நாராயணசாமி, பல்லடம் மின்கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், பொங்கலூர் உதவி செயற்பொறியாளர் லத்திஸ்குமார், தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலைய உதவி பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags : South Avinashipalayam Power ,Station ,
× RELATED மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே...