நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு :டி.ஆ.ர்ஓ. தகவல்

ஈரோடு,செப்.2:மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் நத்தம் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுக்கு முன் குடியிருப்பவர்கள் பட்டா கோரி 30,000 மனுக்கள் வரை விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 30,000 மனுக்களில் 18 ஆயிரம் மனுக்களுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. குறைந்தது 5 முதல் 10 ஏக்கர் அரசு நிலங்கள் எங்கு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்க வசதியாக ரயில்நிலையம் அருகில் உள்ள இடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வு செய்யும் பணி நடந்து வருகின்றது. இவ்வாறு கூறினார்.

Related Stories: