சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7வது நாளாக நகைகள் சரிபார்ப்பு ஆய்வு பணி

சிதம்பரம், செப். 2: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணிகள் கடந்த 22ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 7வது நாளாக நகை சரிபார்ப்பு ஆய்வு பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறையினர் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி, திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம் மற்றும் நகை மதிப்பீட்டு வல்லுனர்கள் திருச்சியை சேர்ந்த தர்மராஜன், திருவண்ணாமலை குமார், விழுப்புரம் குருமூர்த்தி ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர்

நேற்று நடராஜர் கோயிலுக்கு வந்தனர். அவர்களை, கோயிலில் தீட்சிதர்கள் அமர வைத்து நகைகள்  சரிபார்ப்பு ஆய்வு பணி மேற்கொண்டனர். இதுவரை நடைபெற்ற ஆய்வில் 2005ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் காணிக்கை குறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நேற்று 7வது நாளாக  2013ம்  ஆண்டு முதல் வரப்பட்ட  நகைகள் சரிபார்ப்பு ஆய்வு பணி  நடைபெற்று வருகிறது.

Related Stories: