×

காளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதி

காளையார்கோவில், செப்.2: காளையார்கோவில் ஒன்றியம் சிவகங்கை மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு நாள் தோறும் மாணவ, மாணவிகள் உள்பட 2000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால்  பேருந்து நிலையம் தினந்தோறும் பரபரப்பாக காணப்படும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பேருந்து நிலையம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. மேலும், சில வருடங்களுக்கு முன் போடப்பட்ட சிமிண்ட் சாலை தற்போது  பெயர்ந்து நடக்ககூட முடியாத அளவிற்குப் பள்ளம் மேடுகளாக உள்ளன. இந்த பள்ளங்களில் சிறு மழைக்கே குளம்போல் தண்ணீர் தேங்கிவிடுகின்றது. பேருந்து நிலையம் அருகில் மதுரை செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்கள் உள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பயணிகள் மற்றும் வியாபாரிகள் விட்டுச்செல்லும் கழிவுப் பொருட்களால் துர்நாற்றம்  வீசுகிறது. தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் உடனடியாக காளையார்கோவில் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் சுகாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் கொசு மருந்து பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Kalayarko ,
× RELATED காளையார்கோவிலில் இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம்