×

உச்சிப்புளி,மண்டபம் பகுதியில் 46 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

ராமநாதபுரம், செப்.2: உச்சிப்புளி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 46 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, பரமக்குடி, ஏர்வாடி, சாயல்குடி, தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி உள்பட 312 இடங்களில் விநாயகர் சிலைகள் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இச்சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இதைத்தொடர்ந்து மண்டபத்தில் மக்கள் வழிபாட்டுக்கு வைத்த 14 சிலைகள் நேற்று மாலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். இச்சிலைகள் தென் கடலில் கரைக்கப்பட்டன.இதேபோல் உச்சிப்புளி வட்டார பகுதிகளில் மக்கள் வழிபாட்டுக்கு வைத்த 32 விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கப்பட்டன.



Tags : Ganesha ,Mandapam ,Uchipulli ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை