பணிக்கொடையை உயர்த்தக்கோரி எல்ஐசி முகவர் சங்கம் போராட்டம்

திண்டுக்கல், செப். 2: திண்டுக்கல் - பழனி ரோட்டில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பாக முகவர் சங்க கூட்டுக்குழு சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி தர வேண்டும். ஆயுள் காப்பீட்டிற்கு செலுத்தும் பணத்திற்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். பணிக்கொடையை தங்களுக்கு உயர்த்தி தரவேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.குழு காப்பீடு வயது மற்றும் தொகையை உயர்த்த வேண்டும். முகவர்களுக்கான கமிஷனை 2.5 சதவீதம் உயர்த்தி தரவேண்டும். பங்களிப்பு, ஓய்வூதியம் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர். இதில் சங்கத்தின் கூட்டுக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: