×

சாயர்புரத்தில் திருமண்டல லே செயலர், புதிய குருவானவருக்கு வரவேற்பு

தூத்துக்குடி, செப். 2: சாயர்புரத்தில் திருமண்டல லே செயலர், புதிய குருவானவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட சாயர்புரம் தூய திருத்துவ ஆலயத்தில் லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மற்றும் புதிய குருவானவராக பொறுப்பேற்றுள்ள இஸ்ரேல் ராஜதுரைசிங் ஆகியோருக்கு வரவேற்பு விழா மற்றும் சேகர நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திருமண்டல செயற்குழு உறுப்பினர் சாயர்புரம் ராஜேஷ் ரவிசந்தர் தலைமை வகித்தார். கூட்டத்தில் சாயர்புரம் சேகர செயலர் அபிஷேகம், பொருளாளர் ஜான்சன்பொன்சிங், எல்சிஎப் கமிட்டி செயலர் அதிசயராஜ், பொருளாளர் அலெக்சாண்டர், சேகர கமிட்டி உறுப்பினர்கள் லலிதா ஜார்ஜ், மல்லிகா, ரீட்டா ஜேம்ஸ், பிரேம் குமார், பிரகாசம், டேவிட் ராஜபாண்டி, ஜான்சன், பொன்ராஜ், லூக்காபுரம் ஜெயபாண்டியன், மெஞ்ஞானபுரம் ஜான்சன், பிரேமா,அருண், ராஜதுரை, எட்வர்ட் ஜெபராஜ்,ஜேம்ஸ் அருமைநாயகம், ஆனந்தராஜ், ரத்தினராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sairapuram ,
× RELATED வீடு புகுந்து திருடியவர் கைது