×

கோவில்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்

கோவில்பட்டி, செப். 2: கோவில்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நகராட்சி சேர்மன் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவில்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்க விழா நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் சேர்மன் கருணாநிதி தலைமை வகித்து வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒரு டாக்டர், பிசியோதெரபி டாக்டர், நர்ஸ் ஆகியோர் இந்த வாகனத்தில் சென்று கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளிலும் உள்ள முதியோர், மாற்றுத் திறனாளிகள், மருத்துவமனைக்கு நடந்து செல்ல முடியாதவர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்குவார்கள். இதற்காக வாகனத்திலேயே மருந்து, மாத்திரைகளும் வைக்கப்பட்டு இருக்கும். இந்நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் ராஜாராம், சுகாதார அலுவலர்கள் நாராயணன், முருகன், வள்ளிராஜ், ராஜாநசுருதின் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா