×

ஆவுடையப்பன், அப்துல்வஹாப் எம்எல்ஏ தலைமையில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு

கே.டி.சி நகர், செப்.2: இரு நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லைக்கு வருகை தந்த தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாளை கே.டி.சி. நகர் 4 வழிச்சாலை பாலம் அருகே நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஞானதிரவியம் எம்.பி., மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பாளை யூனியன் சேர்மனும் தெற்கு ஒன்றியச் செயலாளருமான கேஎஸ் தங்கபாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளர் கிரகாம்பெல், மத்திய ஒன்றியச் செயலாளர் போர்வெல் கணேசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் வேலன்குளம் முருகன், வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், பகுதி செயலாளர்கள் பாளை அன்டன் செல்லத்துரை, மேலப்பாளையம் துபை சாகுல், மண்டல தலைவர்கள் பாளை பிரான்சிஸ், நெல்லை மகேஷ்வரி, தச்சை ரேவதி பிரபு, மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமன் டேவிட், மகேஷ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பரமசிவ ஐயப்பன், தொண்டர் அணி மாநில துணைச்செயலாளர் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்வசூடாமணி, தவசிராஜன், பொதுக்குழு உறுப்பினர் சுடலைக்கண்ணு,  இளைஞர் அணி முன்னாள் செயலாளர் ஜார்ஜ் கோசல், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வில்சன் மணித்துரை, நெல்லை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காசி மணி, நெல்லை மாநகர துணைச் செயலாளர் மூளிகுளம் பிரபு, கண்ணன், மகளிர் அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மல்லிகா அருள், மானூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், மாநகர துணைச் செயலாளரும், மாநகராட்சி நிதிக்குழுத் தலைவருமான சுதா மூர்த்தி, வேல்ராஜா, சிவசுப்பு, மைக்கேல் ராஜேஷ், எம்.ஏ.சி. சேவியர், மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், பேச்சியம்மாள், நித்திய பாலையா, ஊராட்சி தலைவர்கள் ராஜவல்லிபுரம் காளி, கான்சாபுரம் வேல்துரை, தருவை கண்ணன், செவல் ஹரிகிருஷ்ணன், பாளை ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வ சங்கர், நம்பிராஜன்,  போர்வெல் சுபாஷ், ஒன்றிய துணைச்செயலாளர் கிருஷ்ணவேணி, கேடிசி தர்மர், பாளை பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், திருக்குறுங்குடி பேரூர் செயலாளர் கசமுத்து, மீனவர் அணி எரிக்ஜுடு, மேலப்பாட்டம் சுரேஷ், பெருமாள், கே.டி.சி. நகர் மாரிச்சாமி, மகாராஜன், வல்லநாடு முத்து, தருவை மகாராஜன், திடியூர் கண்ணன், பேபி கோபால், சிவந்திபட்டி இசக்கி பாண்டி, சப்பாணி பாண்டியன், எஸ்.என். சேக் மைதீன், இலியாஸ், துபை இஸ்மாயில், ஜெயின் உசேன், நூர் ஜமால், பீரப்பா, மகளிர் அணி சவுந்தரம், அனிதா, ஹமீதா, பத்மா, பணகுடி ஆனந்தி, வள்ளி, விவசாய அணி மாடசாமி, வள்ளியூர் சேதுராமலிங்கம், பாளை சதீஷ், ஐயாதுரை பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதே போல் அமைச்சர் துரைமுருகனை திமுக பகுதி செயலாளர் தச்சை  சுப்பிரமணியன், மானூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அருள்மணி, மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, மாநகர துணைச்செயலாளர் அப்துல் கையூம், நெல்லை பகுதி செயலாளர் நமசிவாயம் (எ) கோபி, இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன்,  மானூர் யூனியன் கவுன்சிலர் முத்துமாரி, டவுன் சுரேஷ், வேல்முருகன், குமரேசன், கல்லூர் பாலா, பேட்டை காதர் ஒலி, மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்றனர்.

Tags : Minister ,Duraymurugan ,Aouduyappan ,Abdulwahab ,MLA ,Nelly ,
× RELATED காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி...