×

தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலை விஜர்சனம்

நெல்லை, செப்.2:  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் முருகன் கோயில் எதிரே இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கற்பக விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து இச்சிலையை உடனடியாக விஜர்சனம் செய்யுமாறு அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இந்த விநாயகர் சிலையை இந்து முன்னணியினர் நேற்று சாலைத்தெரு, பத்துப்பாட்டுத்தெரு, சிந்தாமணிதெரு, கம்பராமாயணதெரு, மணிமேகலைதெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்தனர். பாஜ பொருளாதார பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். பாஜ மாவட்ட செயற்குழுவைச் சேர்ந்த  அருள்ராஜ், செல்வம் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சிவா, பொதுச் செயலாளர் பிரமநாயகம், செயலாளர் செல்வராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் சங்கர், கவுரவத் தலைவர் சண்முகையா பாண்டியன், அகஸ்டின் ராஜா, பலவேசராஜா, விக்னேஷ், பாலமணிகண்டன், பூபதிராஜா, ராஜா, பேச்சிமுத்து, மகராஜன், செல்வன், மகேஷ், நிஷாந்த், விக்னேஷ், இசக்கியப்பன், ராஜாமணி, தமிழ்செல்வன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சரணம் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Vijarsanam ,Ganesha ,Tamiraparani river ,
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி