திருவள்ளூர் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்; கணவன் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (29). இவரது மனைவி காயத்திரி (23), இவர்களுக்கு ரியாஸ்ரீ (6), ரித்திகா (3) என்ற மகள்களும் உள்ளனர். பிரேம்குமார் 4 சக்கர ரதம் வாகனத்தை சொந்தமாக ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி பிரேம்குமார் வழக்கம் போல் வண்டியை எடுத்துக் கொண்டு சவாரிக்கு சென்றவர் மாலை 4 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார். அதேபோல் நண்பர்கள், உறவினர்களிடமும் விசாரித்துள்ளார்.

ஆனால் எங்கும் கிடைக்காததால் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் பிரேம் குமார் கொடுத்த புகாரின் பேரில் வீட்டிலிருந்து மாயமான காயத்திரி மற்றும் 2 குழந்தைகளையும் போலீசார் தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பலரான். இவரது மனைவி பரிமளா (42). இவர்களது 3வது மகள் ஜோதிகா (21) என்பவர் ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற ஜோதிகா மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிகாவின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்ட போது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜோதிகாவின் பெற்றோர் கம்பெனியில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது பணி முடிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மகளின் தோழிகளிடம் விசாரித்தும் எந்த தகவலும் இல்லாததால் ஜோதிகாவின் தாய் பரிமளா திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: