×

மாநில அளவிலான கராத்தே போட்டி, திருவள்ளூர் வீரர்கள் பதக்கம் வென்று சாதனை; கலெக்டர் வாழ்த்து

திருவள்ளூர்: மாநில அளவிலான 29-வது தமிழ்நாடு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 6 வயது முதல் 18 வயது வரை வெவ்வேறு பிரிவுகளாக ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்று நடைபெற்ற போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 900 பேர் பங்கேற்றனர். அதன்படி திருவள்ளூர் மாவட்ட கராத்தே அசோசியேஷன் தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, துணைத்தலைவர் ரவி, சேர்மன் லட்சுமிகாந்தன், தலைவர் ராஜா, துணை செயலாளர் தீபன் ஆகியோர் ஏற்பாட்டில் கராத்தே வீரர்கள் கோவையில் நடைபெற்ற போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 106 பேர் பங்கேற்றனர்.

இதில் திருவள்ளூரில் உள்ள போதிவேவ்ஸ் கராத்தே அகாடமி சார்பில் பயிற்சியாளர் தனசேகர் தலைமையில் 9 கராத்தே வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் திருவள்ளூரை சேர்ந்த கவுதம், ஜனனி, இமானி, முகேஷ் கண்ணா, காவின்ராஜ் ஆகியோர் தங்கப்பதக்கம், ஷாலினி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும், மகளிர் அணி தங்கப்பதக்கம் என மொத்தம் 7 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று திருவள்ளூர் வீரர்கள், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து வெற்றி பெற்ற வீரர்களுடன் பயிற்சியாளர் தனசேகர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...