×

குறைதீர்நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

ஜெயங்கொண்டம், ஆக.27: பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி கூறி அனைவருக்கும் கையேடுகள் வழங்கினார். ஜெயங்கொண்டம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் குறிஞ்சி தேவி பேசுகையில், மாணவர்களின் தொடர்ச்சியான வருகையை கவனித்தல். இடைநிற்றலை தவிர்த்தல், பள்ளியின் வளர்ச்சியில் மேலாண்மை குழுவினரின்பங்கு , சுற்றுப்புற சுகாதாரம், மாணவர்களை போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் கவனித்தல், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கி கூறினார். பின்னர் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் உதவி ஆசிரியர் வானதி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆறுமுகம், மலர்க்கொடி ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags : Farmers Request School Management Team ,Less ,Day ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில்...