×

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை

தஞ்சாவூர், ஆக.27:தஞ்சாவூர் மாநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பணிகளை முடித்து வீடு திரும்பியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய மலை தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. தஞ்சாவூர், வல்லம், திருவையாறு, மாரியம்மன் கோவில், பாபநாசம், அம்மாபேட்டை, சாலியமங்கலம், பூண்டி, கண்டியூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. தினமும் காலை நேரங்களில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 25ம் தேதி பெய்த மழையால் அதிகபட்சமாக தஞ்சாவூர், வல்லம் பகுதியில் 31 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. குருங்குளத்தில் 21 மி.மீ., பூதலூரில் 8. 40 மி. மீ., திருக்காட்டுப்பள்ளியில் 2.40 மி. மீ., அணைக்கட்டில் 7.40 மி. மீ., ஒரத்தநாட்டில் 2.40 மி.மீ., நெய்வாசல் தென்பாதியில் 12.80மி.மீ., ஈச்சம்விடுதியில் 17.20 மி.மீ மழைபதிவாகி உள்ளது. மொத்தமாக மழையின் அளவு 133.80 மி.மீட்டரும், சராசரியாக 6.37 செ. மீ மழை பதிவாகி உள்ளது என தஞ்சாவூர் பேரிடர் மேலாண்மை கூறியுள்ளது.

Tags : Tanjore district ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...