ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு தஞ்சாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஆக.27: தஞ்சாவூர் அரசு மன்னர் சரபோஜி கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வர் ரோஸி, தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணி ஆர்.ஆர்.நகர், காவிரி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வல்லம் நம்பர்1 சாலை வழியாக மீண்டும் சரபோஜி கல்லூரியை அடைந்தது. பேரணியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி சென்றனர். மேலும் போதைப் பொருளுக்கு எதிராக பேரணியில் கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories: