×

மாற்று சிந்தனைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் மிஸ்டர் கூப்பர் குரூப் இயக்குனர் அறிவுரை

திருச்சி, ஆக. 27: திருச்சி அம்மாப்பேட்டையில் அமைந்துள்ள சவுடாம்பிகா கல்வி குழுமத்தின் அங்கமான ஜெஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சவுடாம்பிகா கல்விக்குழுமம் மற்றும் ஜெஜெ பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.செந்தூர் செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை மிஸ்டர் கூப்பர் குரூப் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மோகன்ராம் கலந்து கொண்டு பேசுகையில், அணுகுமுறை மற்றும் உயர்வான சிந்தனை குறித்த முக்கியத்துவம், சுய ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற திறன்களை பெருக்கி கொள்ளும் முறைகள் மற்றும் மாணவர்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர் பொறியியல் துறை சேர்ந்த மாணவர்கள் நேர் காணலுக்கு எவ்வாறு தயாராவது, எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்தும், தரமான பயோடேட்டா தயார் செய்வதும், பயோடேட்டாவிற்கு தகுந்தவாறு மாணவர்கள் எவ்வாறு தங்களை மெருகேற்ற வேண்டும் என்பது குறித்தும் விளக்கமாக கூறினார். தற்போதைய வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் வாய்ப்புகள், சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி அடைவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார். மாணவர்களுடைய சந்தேகங்களுக்கு ஆனந்த் மோகன்ராம் விளக்கம் அளித்து உரையாற்றியது மாணவர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் மதியழகன், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Cooper ,Group ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.