முக்கொம்பு கொள்ளிடத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு கரையோர மக்கள், மாணவர்களுக்கு கலெக்டர் பிரதீப்குமார் எச்சரிக்கை

திருச்சி, ஆக. 27: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, சேலம் மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்படுவதால் முக்கொம்பு மேலணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 5 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்தை பொறுத்து, படிப்படியாக உபரி நீர் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்வரத்து விவரத்தினை பொதுமக்கள் அவ்வப்போது தெரிந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும், காவிரி, கொள்ளிடம் சார்ந்த நீர் நிலைகளில் ஆற்றில் குளிக்கவே நீந்தவோ மீன் பிடிக்கவோ அல்லது பொழுது போக்காகவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பாற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் அல்லது மாணவர்கள் செல்பி எடுக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: