×

திருவிக பிறந்தநாள் விழா

பாப்பாரப்பட்டி, ஆக.27: பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகில், தியாகி சுப்ரமணிய சிவா பேரவை சார்பில், திரு.வி.க.,வின் 140வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. பேரவை அமைப்பாளர் விசுவநாதன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் திரு.வி.க உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் நகர கமிட்டி தலைவர் சமதர்மம், முன்னாள் தலைவர் தங்கராஜ், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரகாஷ், நிர்வாகிகள் சேகர், சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜசேகர், முகிலன், தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Screw Birthday Festival ,
× RELATED சூதாடிய 3 பேர் கைது