×

நாமக்கல்லில் இன்று சூரியன் பண்பலை சார்பில் சாலமன் பாப்பையா சிறப்பு பட்டிமன்றம்

நாமக்கல், ஆக.27: பெண்கள் மட்டுமே நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகக் கொண்ட, தென்னிந்தியாவின் முதல் பண்பலை என்ற பெருமைக்குரிய, சேலம் சூரியன் எப்எம் 93.9 நேயர்களுக்கு தினம் தோறும் பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அவ்வப்போது பட்டிமன்றம், இசையும் இசையும் ரிதம் போன்று சில பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளையும் நடத்துவது வழக்கம். அந்த வகையில் சூரியன் பண்பலை, நாமக்கல்லில் முதல் முறையாக இன்று (27ம் தேதி) நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையம் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சி, ராயல் மஹாலில், நகைச்சுவை பட்டிமன்றத்தினை நடத்தவிருக்கிறது. பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் “பொருளாதாரத்தை சிறப்பாக கையாள்வது, அன்றைய தலைமுறையினரே! இன்றைய தலைமுறையினரே! என்ற தலைப்பில் நடக்கவிருக்கிறது. “அன்றைய தலைமுறையினரே”அணியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களான ராஜா, கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோரும் “இன்றைய தலைமுறையினரே”அணியில் பாரதி பாஸ்கர், ரேவதி சுப்புலக்ஷ்மி, கவிதா ஜவஹர் ஆகியோரும் பேசவிருக்கின்றனர்.இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும், இந்த பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள நுழைவு சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Salomon ,Suriya Panpalai ,Namakkal ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்