கரூரில் கிரேட் இந்தியன் சர்க்கஸ் புதிய சாகச காட்சிகள்

கரூர், ஆக. 27: இந்திய அளவில் பிரசித்தி பெற்ற சர்க்கஸ் ஒன்றாக தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் உள்ளது. நாம் திரையரங்குகளிலும் நாடகங்களிலும் பார்க்கும் காட்சிகள் டூப் கலைஞர்களைக் கொண்டு செயல்படுத்துவதை சர்க்கஸில் நேரடியாக நம் கண் முன்னே சர்க்கஸ் கலைஞர்கள் செய்து காண்பிக்கின்றனர்.இதில் அரேபியன் குதிரை மீது சர்க்கஸ் வீராங்கனைகள் செய்யும் பல்வேறு விதமான சாகசங்கள், மரண கூண்டில் 2 சர்க்கஸ் கலைஞர்கள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்ளாமல் கண் இமைக்கும் நேரத்தில் மரண கூண்டில் பைக் சாகசம் கேரள பெண்களின் சாகசக் காட்சிகளநேபாள பெண்களின் நளினமான பாட்டுக்கு எழுதுவதும் நடனம் ஆடுவதும்,அரங்கில் கோமாளிகளின் நகைச்சுவை காட்சிகள், மேஜிக் காட்சிகள் , நேபாள பெண்களின் நடன நிகழ்ச்சி இன்னும் எண்ணற்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ரஷ்ய தலைவர்களின் ரிங்டன்ஸ் விளையாட்டு செல்லப் பிராணியான நாய்கள் செய்தும் சாகச காட்சிகள், குதிரை ஒட்டகம் ஆகிய விலங்குகளின் சாகசம் நாம் கோமாளிகளின் நகைச்சுவை காட்சி அனைவரின் மனதையும் கவரும். தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது வரும் திங்கள் கிழமையுடன் கரூரில் சர்க்கஸ் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. என்று மேலாளர் நாசர் தெரிவித்தார்.

Related Stories: