×

தோகைமலை அருகே கள்ளை ஊராட்சியில் குற்றச்சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா மையம் திறப்பு

தோகைமலை, ஆக. 27: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி கள்ளை பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளது. இதேபோல் கள்ளையில் வோளண்மை கூட்டுறவு சங்கம், ஊராட்சி மன்றம், விஏஓ அலுவலகங்கள், பிரசிதிபெற்ற கள்ளை காளியம்மன் கோயில் மற்றும் அரசு பள்ளிகள் அமைந்து உள்ளது. இந்நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் கிராவல், மணல் போன்ற கனிம வளங்களை கடத்தி செல்வது, விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு உள்ள மின் இணைப்பு வயர்களை திருடி செல்வது, பொது இடங்களில் மது அருந்துவது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. நாள்தோறும் தொடர்ந்து இதேநிலை ஏற்பட்டு வந்ததால் இதை தடுக்க வேண்டும் என்று தமிழர் தேசம் கட்சியின் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.  இதனால் இக்கட்சியின் மாவட்ட செயலாளர் அருள்ராஜ் தனது சொந்த நிதியின் மூலம் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் கள்ளையில் 5 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இதில் கள்ளை பேருந்து நிலையம், நச்சலூர் ரோடு, பேரூர் ரோடு, தோகைமலை ரோடு, திருச்சி ரோடு ஆகிய 5 முக்கிய பகுதிகளில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  இதை குளித்தலை டிஎஸ்பி தர் மற்றும் தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஆய்வு செய்து திறந்து வைத்தனர்.

Tags : Kallai panchayat ,Thokaimalai ,
× RELATED கடவூர் அருகே தளிவாசல் முள்ளிப்பாடி...