×

ஆலந்தலை அற்புதக்கெபி பெருவிழாவில் திருப்பலி

திருச்செந்தூர், ஆக. 27: திருச்செந்தூர் ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி 94வது ஆண்டு பெருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நவநாட்களில் தினமும் காலை 6.15 மணிக்கு திருயாத்திரை திருப்பலி, முற்பகல் 11.30 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 9ம் திருவிழாவான நேற்று முன்தினம் பகல் 11.30 மணிக்கு பல்லாவரம் அருட்பணி சின்னப்பன் தலைமையில் நடந்த திருப்பலியில் கருத்தபிள்ளையூர் அருட்பணி வினோத் மறையுரை ஆற்றினார். மாலை 6.15 மணிக்கு தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ், தூத்துக்குடி தூய பனிமய அன்னை பேராலய அதிபர் குமார்ராஜா, உடன்குடி பங்குதந்தை விக்டர்லோபோ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆடம்பர மாலை ஆராதனையில் கருமாத்தூர் தூய அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் மறையுரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற சப்பர பவனியை அருட்பணி சின்னப்பன் அர்ச்சித்தார்.

10ம் திருவிழாவான நேற்று அற்புதகெபி பெருவிழா நடந்தது. காலை 5.15 மணிக்கு குமார்ராஜா தலைமையில் முதல் திருப்பலி, காலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட  ஆயர் அந்தோனிசாமி தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. திருப்பலியில் பங்குதந்தை ஜெயக்குமார், துணை பங்குதந்தை பாலன், விக்டர் லோபோ, ரூபஸ், கிரேசியஸ், செல்வன், ரத்தினராஜ், ஆச்சர்யம், சில்வெஸ்டர், பீட்டர் பவுல், சந்தீஸ்டன், ரினோ, சந்தியாகு, ஸ்டீபன், வில்லியம், அந்தோனிராஜ், பாலன், மைக்கிள்பிரகாசம், திருத்தொண்டர் பாக்கிய பவுல் மற்றும் நிதிக்குழு செயலாளர் லிபோரியஸ் மற்றும் உறுப்பினர்கள், ரொசாரி மாதா சபை தலைவர் ரொபின்ஸ்டன் மற்றும் உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருப்பலியில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 10 மணிக்கு அருட்பணி ரூபஸ் தலைமையில் ஆங்கிலத் திருப்பலியும், முற்பகல் 11.30 மணிக்கு கொனேலியன் சபை மாநில சபை தலைவர் ரொனால்டு தலைமையில் நவநாள் திருப்பலி நடந்தது. மாலை 4.30 மணிக்கு அமலிநகர் இறைமக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலி அமலிநகர் பங்குதந்தை வில்லியம்சந்தனம் தலைமையில் நடந்தது. மாலை 6 மணிக்கு பங்குதந்தையர்கள் தலைமையில் செபமாலை, நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது. இன்று காலை 6.10 மணிக்கு பங்குதந்தையர்கள் தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெயக்குமார், துணை பங்குதந்தை பாலன், அருள்அன்னையர்கள், ஊர் நலக்கமிட்டி தலைவர் ரமேஷ் தலைமையில் உறுப்பினர்கள், திருத்தல நிதிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் சிறப்பாக
செய்திருந்தனர்.

Tags : Tirupali ,Alanthalai Yumukkepi festival ,
× RELATED திருவழுதிநாடார்விளையில் நற்செய்தி கூட்டம்