×

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி

ராஜபாளையம், ஆக. 26: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சார்பில், பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பணியிடைப் பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது. இதில், விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளியைச் சார்ந்த 47 அறிவியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். கலசலிங்கம் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறைப் பேராசிரியர் கதிரேசன், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி விலங்கியல் துறைப்பேராசிரியர் பாலாஜி மற்றும் ராஜூக்கள் கல்லூரி பேராசிரியர்கள் சிவராம மூர்த்தி, டேவிட் லாரன்ஸ், சீனிவாசன், உமா சங்கரேஸ்வரி ஆகியோர் அறிவியல் பாடங்களில் உள்ள நுட்பங்கள் மற்றும் நவீன வளர்ச்சி பயிற்சிகளில் வழங்கினர்.

இயற்பியல் வேதியியல் ஆய்வுக்கூடங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சியின் நிறைவு விழாவில் வேதியியல் பேராசிரியர் உமாசங்கரேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் நிறைவு உரையாற்றி, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் கல்லூரி துணை முதல்வர்

Tags : Rajapalayam Raju's College ,
× RELATED கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காவல்நிலைய செயல்முறை பயிற்சி