×

காரைக்குடி கழனிவாசலில் ₹1.45 கோடியில் எரிவாயு தகன மேடை நகராட்சி சேர்மன் முத்துத்துரை தகவல்

காரைக்குடி, ஆக. 26: காரைக்குடி கழனிவாசல் வியாழக்கிழமை சந்தை அருகே மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. அதனை நகராட்சி தலைவர் முத்துத்துரை தலைமையில் நகராட்சி ஆணையர் லட்சுமணன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகராட்சி சேர்மன் முத்துத்துரை பின்னர் தெரிவிக்கையில், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வின்றி உழைத்துவருகிறார்.

முதல்வரின் உத்தரவின்படி ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன்.நேரு ஆகியோரின் முயற்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட நிதியில் ரூ 1 கோடியே 45 லட்சத்தில் இப்பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. இங்கு தியான மண்டபம், பூங்கா மற்றும் தகனம் செய்ய வருபவர்களுக்கு உரிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட உள்ளது.

2 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ள இப்பகுதியில் அனைத்து நவீன வசதிகளுடன் மிகச்சிறப்பாக இந்த எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தவிர இதே திட்டத்தில் நகராட்சி அலுவலகம் எதிரே கண்ணதாசன் மணிமண்டபம் அருகே ரூ 1 கோடிய 85 லட்சதில் நாலேஜ் சென்டர் அமைக்கப்பட உள்ளது. இரண்டு தளங்களுடன் அமைய உள்ள இந்த நாலேஜ் சென்டரில் பொதுநூலகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயார் படுத்தும் மாணவர்களுக்கான மையம் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது.

மக்களின் அடிப்படை தேவைகளுக்கான அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். தவிர பருவமழை துவங்குவதற்கு முன்னர் அனைத்து கால்வாய், குளங்களும் தூர்வாரப்பட்டு வருகிறது என்றார். நகர்நல அலுவலர் மாலதி, பொறியாளர் கோவி ந்தராஜ், உதவி பொறியாளர் சீமா, நகர்மன்ற உறுப்பினர் சித்திக், சுகாதார ஆய்வாளர் சுந்தர், மின்கம்பியாளர் வெற்றிவேல், வேலைஆய்வாளர் ஹரி, வட்டசெயலாளர்கள் பாண்டி, குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Karaikudi Kalanivasal Municipal ,Chairman Muthuthurai ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ