×

வரத்து அதிகரிப்பால் சம்பங்கி கிலோ ரூ.30க்கு விற்பனை

திண்டுக்கல், ஆக. 26: திண்டுக்கல் டட்லி பள்ளி எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, வீரக்கல், செட்டியபட்டி, தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் அதிக அளவில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த மார்க்கெட்டில் இருந்து சென்னை, திருச்சி, ஈரோடு, சேலம் மற்றும் கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் பூக்கள் அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனையான சம்பங்கி வரத்து அதிகரிப்பால் நேற்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இதேபோல் ஒரு கிலோ ரோஸ் ரூ.30, கனகாம்பரம் ரூ.200, மல்லிகை ரூ.250, முல்லை ரூ.230, ஜாதிப்பூ ரூ.250, காக்கரட்டான் ரூ.200, அரளி ரூ.40, கோழிகொண்டை ரூ.40, வாடாமல்லி ரூ.30 என்ற விலைகளில் விற்பனையானது.

Tags :
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...