சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

கெங்கவல்லி, ஆக.26: கெங்கவல்லி அருகே 13 வயது சிறுமியை கடத்தி, குழந்தை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த 13வயது மாணவி, 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே மாதம், வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிந்து விசாரித்தார். இதில், கெங்கவல்லி அருகே 95.பேளூர் காட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக்(எ) சூர்யா(24) என்பவர், மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ததும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்த சூர்யாவை, இன்ஸ்பெக்டர் தமிழரசி மடக்கி பிடித்து, கைது செய்தார். பின்னர், ஆத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: