×

பூந்தமல்லி அருகே புரட்சி பாரதம் கட்சி கொடியை அகற்ற வந்த வருவாய்த் துறையினரால் பரபரப்பு

திருவள்ளூர்: ஓசூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு சொந்தமான நிலம் பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ளது. அவருக்கு சொந்தமான இடத்தில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் போது புரட்சி பாரதம் கட்சியின் கட்சியின் கொடி கம்பம் அமைத்து இருப்பதாகவும், அந்தக் கொடி கம்பத்தை அகற்றி தர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மூன்று வார காலத்திற்குள் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று பூந்தமல்லி தாசில்தார் செல்வம், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், வெற்றிச்செல்வி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அந்த கொடி கம்பம் எடுப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது நிலத்தை அளவீடு செய்ததில் சில குறைபாடுகள் உள்ளதாகவும், எனவே மீண்டும் வட்ட தலைமை நில அளவரை கொண்டு முறையாக நிலத்தினை அளக்க வேண்டும் என கட்சி தரப்பில் கூறினர். மீண்டும் அந்த நிலத்தினை அளந்த பிறகு அந்த இடம் தனியாருக்கு சொந்தமான இடம் என்றால் தாங்களே கட்சி கொடிக் கம்பத்தை அகற்றி விடுவதாக கட்சித் தலைப்பில் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினரும், போலீசாரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags : Revolution Bharatham ,Poontamalli ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...