புதுக்கோட்டை வெள்ளரி திருச்சி வருகை தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் குண்டாசில் கைது

திருச்சி, ஆக.26: திருச்சியில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபக் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பெரியசாமி டவர் அருகே கடந்த 11.7.22ம் தேதி நடந்து சென்ற கூலித்தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ₹2000 கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முத்துப்பாண்டி (28) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் முத்துப்பாண்டி மீது திருச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பதாக ஒரு வழக்கு உட்பட நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

எனவே, முத்துப்பாண்டி என்பவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதும் கத்தியை காண்பித்து பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவந்தது. இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் முத்துபாண்டியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: