×

முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதியில் உலா வந்த புலி சிக்கியது

வால்பாறை:  வால்பாறையை அடுத்த முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதியில் உலா வந்த புலி சிக்கியது.வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பஜார் பகுதியில் உள்ள ரேஷன் கடை பகுதியில் நேற்று முன்தினம் காலை புலி நடமாட்டம் காணப்பட்டது. மேலும், சாலையில் நடந்து சென்ற புலியை அப்பகுதி மக்கள் படம் பிடித்து உள்ளனர். இதனால், பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளிலேயே தஞ்சமடைந்தனர். அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் புலியை புகைப்படம், வீடியோ எடுத்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று  வனத்துறையினர் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமலிங்கம் புலி நடமாட்டம் உள்ள முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதியில் ஆய்வு செய்தார். புலியை கண்காணித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், 2 குழு அமைத்து பாதுகாப்பாக பணிகளை செய்யவேண்டும் என வனச்சரகர் மணிகண்டனுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் வலை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7 மணியளவில்  முடீஸ் எஸ்டேட் சதுப்பு பகுதியில் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது. அப்போது வனத்துறையினர் வலையை விரித்து பிடிக்க முயன்றனர். ஆனால், புலி சிக்காமல் தப்பியோடிது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மீண்டும்  புலியை பிடிக்க தீவிர முயற்சியை மேற்கொண்டனர். இதற்கிடையே, ட்ரோன் கேமராக்கள் வைத்து புலியை தேடினர். இரவு 9 மணியளவில் புதரில் புலி மறைந்திருந்தது தெரியவந்தது. பின்னர், டார்ச் லைட் அடித்தும் சத்தம் எழுப்பவே புலி புதிரில் இருந்து வெளியேறியது. அப்போது தயாராக வைக்கப்பட்டிருந்த வலையில் புலி சிக்கியது. அப்போது புலியின் காலில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி வாகனத்தில் ஏற்றி ரொட்டிகடை பகுதிக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். வனத்துறையினர் நீண்ட தேடுதலுக்கு பிறகு புலியை பிடிக்க செய்தி அப்பகுதிமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது….

The post முக்கோட்டுமுடி எஸ்டேட் பகுதியில் உலா வந்த புலி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Trikodududi ,WALBARA ,Trikodududududududi ,Mudez Bazaar ,Triad ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழா வால்பாறையில்...