×

காரைக்குடி வங்கியில் தொழில்முனைவோர் கடன் வழங்கல்

காரைக்குடி, ஆக.24:  காரைக்குடி பெடரல் வங்கி கிளையின் 4ம் ஆண்டு துவக்க விழா மற்றும் வாடிக்கையாளர்கள் விழா, தொழில்முனைவோர் கடன் வழங்கும் விழா நடந்தது. கிளை மேலாளர் ரவி வரவேற்றார். மதுரை மண்டல மேலாளர் வருண் புதிய தொழில் முனைவோர்களுக்கு கடன் அனுமதி வழங்கி பேசுகையில், பெடரல் வங்கிக்கு இந்தியாவில் 1323 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் 174 கிளைகள் உள்ளன. 200 கிளையாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் 21 கிளைகள் உள்ளன. வருடத்துக்கு ரூ.1700 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. இவ்வங்கியில் தொழில்முனைவோர் கடன், விவசாயக்கடன், கல்விக்கடன், நகைக்கடன்கள், வீட்டுக்கடன், வாகன கடன் வழங்கப்படுகிறது.  

புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி அடிப்படையில் ரூ.10 லட்சம் வரை உடனடி கடன் வழங்கப்படுகிறது. இதற்கு எந்தவிதமான அடமானம் தேவையில்லை. 2 வருட ஜிஎஸ்டி ரிட்டன்ஸ் இருந்தால் போதும். தவிர வங்கி  வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 30 செகன்டில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காரைக்குடி கிளை துவங்கப்பட்டு 3 வருடங்களில் ரூ.60 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது. விரைவில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அறந்தாங்கியில் புதிய கிளைகள் துவங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்களின் பெரும் ஒத்துழைப்பு காரணமாகவே வங்கி கிளை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழில்அதிபர்கள், தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karaikudi Bank ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு